News August 5, 2024

Olympics: முதலிடத்தில் சீனா; 57 ஆவது இடத்தில் இந்தியா

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 10ஆவது நாளின் இறுதியில் பதக்கப் பட்டியலில் இந்தியா 57ஆவது இடத்தை பிடித்துள்ளது. 33ஆவது ஒலிம்பிக்ஸ், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் சீனா, அமெரிக்கா உள்பட 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா 3 வெண்கல பதக்கங்களுடன் 57ஆவது இடத்தில் உள்ள நிலையில், சீனா (19), USA (18), பிரான்ஸ் (12) தங்கப் பதக்கங்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.

Similar News

News January 21, 2026

திருவள்ளூர்: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

image

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 21, 2026

அரசுப் பள்ளி மாணவி கர்ப்பம்.. வசமாக சிக்கினார்

image

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் 15 வயதுடைய அரசுப் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் மணி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த மாணவியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றபோது உண்மை தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News January 21, 2026

2000’s ஜாம்பவான்கள் ரீயூனியன்! (PHOTO)

image

2000-களின் காலகட்டத்தில் கிரிக்கெட் பார்க்க தொடங்கியவர்களுக்கு இந்த போட்டோவில் உள்ள ஜாம்பவான்களை பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. சேவாக்கின் அதிரடி, யுவராஜின் Six 6’s, முகமது கைஃபின் தரமான கேட்ச்கள், நெஹ்ரா மற்றும் அகர்கரின் ஸ்விங் பவுலிங் என ஒவ்வொன்றும் உங்களுடைய நினைவில் நிழலாடும். சமீபத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி தான் SM-ல் தீயாக பரவுகிறது. இதில் உங்களுக்கு பிடித்தமான வீரர் யார்?

error: Content is protected !!