News August 5, 2024
‘தளபதி 69’ படத்தில் இணையும் மமிதா பைஜு?

தேர்தல் அரசியலில் கால் பதிக்கும் முன் நடிகர் விஜய் கடைசி திரைப்படமாக ‘தளபதி 69’ படத்தில் நடிக்கவுள்ளார். KVN நிறுவனத்தின் தயாரிப்பில் எச். வினோத் இயக்கவுள்ள அதிரடி அரசியல் கதைக்களத்திலான இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில், ‘பிரேமலு’ பட கதாநாயகி மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், அவரிடம் படத்திற்கான லுக் டெஸ்ட் நடத்தப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News March 19, 2026
கூட்டணி முடிவை மீண்டும் மாற்றிய ரங்கசாமி!

NDA-வில் அதிருப்தியிலிருந்த NR காங்கிரஸ், தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் விஜய் உடன் கூட்டணி அமைப்போம் என நேற்று முன்தினம் கூறியிருந்தது. மேலும், 2 நாள்களாக NR காங்கிரஸ் – பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருந்தனர். இதனால், கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிய ரங்கசாமி, இன்று காலை முதல் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
News March 19, 2026
நம்பர் முக்கியமில்ல, மெம்பர் தான் முக்கியம்: ECI அசத்தல்

ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதற்கு இது சிறந்த உதாரணம். நெல்லை அம்பை தொகுதிக்குட்பட்ட மாஞ்சோலை அடுத்த ஊத்து பகுதியில் 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்காக தரைப்பகுதியிலிருந்து 40 கிமீ தூரத்திலான மலைப் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. அதேபோல், 5 வாக்குகளுக்காக கொல்லிமலை எஸ்டேட்டிலும் வாக்குச்சாவடி அமையவுள்ளது. Great!
News March 19, 2026
ஆதவ்வால் ஆனந்த் தரப்பு அதிருப்தியா?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் இடையே மோதல்போக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், RK நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் சில தொகுதிகளை ஆதவ் தரப்பு கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இது, இந்த தொகுதிகளில் களப்பணியாற்றி வந்த ஆனந்த் தரப்பினருக்கு வருத்தம் அளித்துள்ளதாம். இதுதொடர்பாக முறையிட்ட நிர்வாகிகளிடம், தன்னையே பாஜகவுடன் பேசுவதாக விஜய் வரை புகார் கூறிவிட்டனர் என ஆனந்த புலம்புவதாக கூறப்படுகிறது.


