News August 4, 2024
திண்டுக்கல் அணிக்கு 130 ரன்கள் இலக்கு

TNPL லீக் தொடரின் இறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணிக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் விளையாடிய கோவை 129/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராம் அரவிந்த் 27, அதீக் 25, சுஜய் 22 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, விக்னேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். எந்த அணி TNPL கோப்பையை வெல்லும்?
Similar News
News March 16, 2026
தனிநபர் விமர்சனத்தை தவிர்க்கவும்: மு.க.ஸ்டாலின்

பரப்புரையின்போது தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும் என்று திமுக மா.செ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும் என்றும், கடந்த தேர்தல்களில் வாக்குகள் குறைவாக பெற்ற இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி கட்சியினருடன் திமுகவினர் இணைந்து செயல்படவும் ஆலோசனை கூறியுள்ளார்.
News March 16, 2026
தேர்தல்: மதுபான கடை நேரம் குறைப்பு

புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் குடோன்களில் இருந்து காலை 10 – மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கலால் துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மதுக்கடைகளும், 12 மணி வரை ரெஸ்ட்டோ பார்களும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
ஆணவக் கொலைக்கு எதிராக கர்நாடக அரசின் மசோதா!

ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றும்படி பல ஆண்டுகளாக TN-ல் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி KN பாஷா தலைமையில் ஆணையம் மட்டுமே திமுக அரசால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆணவக் கொலையை கடும் குற்றமாக கருதி ’Iva Nammava’ மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆணவக் கொலை செய்தோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை இம்மசோதா பரிந்துரைக்கிறது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?


