News August 4, 2024

ஹர்திக் பாண்டியாவை கழற்றிவிடும் மும்பை அணி?

image

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து, ஹர்திக் பாண்டியா நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணி கேப்டனாக இருந்த ஹர்திக்கை வாங்கிய MI அணி நிர்வாகம், அவரை கேப்டனாக்கியது. ஆனால், 2024 ஐபிஎல் சீசனில் லீக் சுற்றுடன் MI வெளியேறியது. இதனால் அவரை நீக்க முடிவு செய்துள்ள அணி நிர்வாகம், சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 20, 2026

19 சீசன்கள்.. IPL-ன் அசைக்க முடியாத 4 ஜாம்பவான்கள்!

image

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL-ன் அனைத்து சீசன்களிலும்(19 சீசன்கள்) 4 பேர் மட்டுமே விளையாடியுள்ளனர். தோனி(CSK, PWI), ரோஹித் சர்மா(MI, DCH), விராட் கோலி(RCB) ஆகியோருடன் இந்த லிஸ்ட்டில் மனிஷ் பாண்டேவும்(RCB, SRH, DC, PWI, MI, LSG, KKR) உள்ளார். இதில், அனைத்து சீசனிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரராக விராட் கோலி மட்டுமே உள்ளார். ரஹானே, ஜடேஜா ஆகியோர் 18 சீசன்களில் விளையாடியுள்ளனர்.

News March 20, 2026

புதுச்சேரியில் தவெக கூட்டணி முடிவு மாறியது!

image

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது. அங்கு, ஆளும் NR காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தவெக 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதனால், இன்று (அ) நாளை 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளாராம்.

News March 20, 2026

என்ன செய்கின்றனர் SC/ST எம்எல்ஏக்கள்?

image

தமிழக சட்டப்பேரவையில் <<19430913>>ரிசர்வ் தொகுதிகள்<<>> மூலம் 46 பேர் MLA-க்களாக உள்ளனர். ஆனால், தங்களின் சமூக மக்களின் பிரச்னைகளுக்கு அவர்கள் பேசுவதில்லை என்ற விமர்சனம் உள்ளது. வன்கொடுமை சம்பவமாக இருந்தாலும், பட்டியல் மக்களுக்கான நிதியை தவறாக பயன்படுத்தினாலும் இவர்கள் போராடுவதில்லை, பதவிக்காக தாங்கள் சார்ந்த கட்சிகளின் ஊதுகுழல்களாகவே செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. உங்கள் கருத்து?

error: Content is protected !!