News August 4, 2024
மதுரையில் ஒரே நாளில் ரூ.8.72 கோடி வருவாய்

மதுரையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சனிக்கிழமை நாளிலும் பத்திரப்பதிவு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 52 சார் பதிவாளர் அலுவலங்களில் ஒரே நாளில் 1465 பத்திரங்கள் பதிவாகின. இதன் மூலம் ரூ.8.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட அதிகம். மேலும், 2024 ஏப்.,1 முதல் நேற்று வரை 99 ஆயிரத்து 732 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.367.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
Similar News
News August 29, 2025
மதுரை மாநகராட்சி மின் மயானத்தில் புதிய கட்டணம் நிர்ணயம்

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான மூலக்கரை மற்றும் தத்தனேரி ஆகிய பகுதியில் மின் மற்றும் எரிவாயு மூலம் தகனம் செய்யும்போது நவீன எரிவாயு தகன மேடையினை பயன்படுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான 3,450 ரூபாய் மட்டும் பொதுமக்களிடம் தகன மேடையில் வைத்து எரியூட்டும் தொகை மற்றும் புதைப்பு கட்டணமாகவும் நிர்ணயித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் என அறிவிப்பு.
News August 29, 2025
64 ஆண்டுகளுக்கு பின் நடந்த கும்பாபிஷேகம்

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 64 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது. நான்காம் காலயாக பூஜைகள் நடந்தன. பின்பு கடம் புறப்பாடாகி காலை 9:00 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் கோபாலன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ராஜா, சோழவந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன் கலந்து கொண்டனர்.
News August 29, 2025
மதுரையிலேயே IT வேலை.. HCL தரும் சூப்பர் வாய்ப்பு..

மதுரை HCL ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள புராடெக்சன் சப்போர்ட் புரோபஷனல் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக<