News August 4, 2024
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜோகோவிச்

பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸுடன் அவர் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஜோகோவிச் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் அல்கராஸை வீழ்த்தினார். இதன்மூலம், ஜோகோவிச் தங்கம், அல்கராஸ் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். <<-se>>#Olympics<<>>
Similar News
News February 7, 2026
ஷேவிங் செய்யும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

➤ரேசரை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது ➤ஒரே ரேசரை மாதக்கணக்கில் பயன்படுத்துவது ➤மேல் நோக்கி ஷேவ் செய்வது ➤சோப்பை போட்டு ஷேவ் செய்வது ➤அதிக அழுத்தம் கொடுத்து ஷேவ் செய்வது ➤ஷேவ் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாமல் இருப்பது. இதுபோன்ற தவறுகளை செய்தால் காயம், எரிச்சல், அரிப்பு, வறட்சியில் இருந்து தொடங்கி, நோய்த்தோற்று ஏற்படலாம். இதில் நீங்க எந்த தப்ப பண்றீங்க?
News February 7, 2026
தேர்தலில் TN vs NDA இடையே தான் போட்டி: ஸ்டாலின்

துரோகிகளும் எதிரிகளும் சேர்ந்து ஒட்டுமொத்த TN-ன் சுயமரியாதையை அடகுவைக்க பார்க்கிறார்கள் என விருதுநகரில் ஸ்டாலின் பேசியுள்ளார். வரும் தேர்தலில் TN-க்கும், NDA-க்கும் இடையே தான் போட்டி எனக் கூறிய அவர், இளைஞரணியின் ஆதரவு தொடர்ந்து இருந்தால் திமுகவை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.
News February 7, 2026
வீட்டிலிருந்தே ஆதார் எண்ணை இணைக்கலாம்!

கேஸ் நுகர்வோர் அனைவரும் ஆதார் e-KYC-ஐ பூர்த்தி செய்ய வேண்டும் என்று மத்திய இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே 75% பேர் இந்த செயல்முறையை முடித்துவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வீட்டிலிருந்தே இலவசமாக KYC-ஐ பூர்த்தி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <


