News August 4, 2024
சீமானுக்கு திருச்சி எஸ்பி நோட்டீஸ்

காவல்துறையினரை தகாத வார்த்தையால் திட்டியதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Similar News
News February 8, 2026
சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News February 8, 2026
தவெக கூட்டணியின் கொள்கை முடிவை கூறிய அருண்ராஜ்!

தவெகவுடன் கூட்டணியில் இணைவோருக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக அருண்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், தீய சக்தி திமுகவை வீழ்த்துவதே தங்களது முதன்மையான இலக்கு; கொள்கை என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேநேரம், தற்போது கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார்.
News February 8, 2026
செல்போனில் ஆபாச வீடியோ தேடியவருக்கு ஷாக்!

சீனாவில் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் இருந்த அந்தரங்க வீடியோ Live Stream ஆனது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விசாரணையில், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது ஸ்விட்ச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட ஸ்பை கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. போலீஸில் புகார் அளித்த பிறகு பெரிய மாஃபியா கும்பல் சிக்கியுள்ளது. ஹோட்டலில் தங்கும் போது தம்பதியினர் உஷார்.


