News August 4, 2024
இலங்கைக்கு எதிராக தடுமாறும் இந்திய அணி

இலங்கைக்கு எதிரான 2ஆவது ODI போட்டியில், 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. கொழும்புவில் முதலில் பேட்டிங் செய்த SL, 240/9 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய IND வீரர்கள், ஆரம்பத்தில் அதிரடி காட்டினர். இதையடுத்து, ரோஹித் 64, கில் 35, துபே 0, கோலி 14, ஸ்ரேயாஸ் 7, ராகுல் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். தற்போதுவரை IND 23.2 ஓவர்களில் 147/6 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News March 25, 2026
KN நேரு மீது ஏன் FIR பதியவில்லை? சென்னை HC

ஐகோர்ட் உத்தரவிட்டும் KN நேரு மீது FIR பதியவில்லை என அதிமுக MP இன்பதுரை DVAC மீது கோர்ட் அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த சென்னை HC, KN நேரு மீது உடனடியாக FIR பதியுமாறு கூறியும் ஏன் பதியவில்லை, உத்தரவையே ஏன் சிதைக்க பார்க்கிறீர்கள் என DVAC-க்கு கேள்வி எழுப்பியது. அப்போது உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக TN அரசு தரப்பில் கூற, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
News March 25, 2026
விடுமுறை.. ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

வார இறுதி & மகாவீர் ஜெயந்தி (மார்ச் 31) விடுமுறையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். நீங்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக 915 சிறப்பு பஸ்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனவே, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்போர் இங்கே <
News March 25, 2026
சென்னையில் IPL போட்டி நடக்காதா?

TN-ல் ஏப்.23 தேர்தல் நடக்கவுள்ளதால் சென்னையில் நடக்கவுள்ள 2 IPL போட்டிகளை ஒத்திவைக்குமாறு பிரபாகரன் என்பவர் HC-ல் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் போலீஸுக்கு இது கூடுதல் சுமை எனவும் தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், ஏப்.3-ல் CSK vs PBKS & ஏப்.11-ல் CSK vs DC போட்டிகளை ஒத்திவைக்கும் நிலை ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.


