News August 4, 2024

ஓராண்டுக்குப் பின் கர்ப்பிணிக்கு கிடைத்த நீதி

image

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவர் உள்பட 17 பேரால் நிர்வாணமாக வீதியில் நடக்கவைத்து சித்ரவதை செய்யப்பட்டார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தற்போது அவருக்கு நீதி கிடைத்துள்ளது. அப்பெண்ணின் கணவர் உள்பட 14 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 3 பெண்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

image

ஹார்​முஸ் நீரிணையில் நிலவும் ஈரானின் தாக்குதலால், பல எண்ணெய் கப்​பல்​கள் இந்​தியா வரு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்​சங்​கர் மற்றும் <<19367934>>PM மோடி ஈரான் அரசுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை<<>> நடத்தினர். அதன் பலனாக இந்​தி​ய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

News March 13, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 631 ▶குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ▶பொருள்: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

News March 13, 2026

அந்த கொடூரர்களுக்கு மரண தண்டனை வேண்டும்: சீமான்

image

பள்ளி சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தினமும் அரங்கேறுகிறது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் TN-ல் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யும் இத்தகைய கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!