News August 4, 2024
வயநாட்டிற்கு சென்ற தஞ்சை நபரை மீட்க கோரிக்கை

பாபநாசம் அருகே சோளகநத்தம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயநாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். கடந்த 4 நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. மேலும் அவரை பற்றி அரசு தகவல் தெரிவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஷேர் செய்யவும்
Similar News
News August 22, 2025
தஞ்சை அருகே குளத்தில் மிதந்த பிணம்

திருவோணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தளிகை குளத்தில் வாலிபர் ஒருவரது சடலம் மிதந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியைடந்த மக்கள் திருவோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இறந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டை புதுவயல் பகுதியை பெரியசாமி (33) என்பது தெரிய வந்தது.
News August 22, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.21) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
தஞ்சை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு!

தஞ்சையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <