News August 4, 2024

பட்டத்தை வைரமுத்து மறுக்க வேண்டும்: சுப.வீ

image

கவிஞர் வைரமுத்துவுக்கு மதுரை தமிழ் இசைச் சங்கம் ‘முத்தமிழ் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கவுள்ளது. அதனை அவர் மறுப்பதே பெருமை என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை ‘முத்தமிழ் அறிஞர்’ என்று அழைக்கும்போது, வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ் பேரறிஞர்’ என்ற பட்டம் பொருத்தமாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.

Similar News

News August 18, 2025

பிழையை திருத்திக் கொள்ள திமுகவுக்கு வாய்ப்பு: நயினார்

image

2002-ல் ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் களமிறங்கியபோது, திமுக எதிராக வாக்களித்தது. இந்நிலையில், மாபெரும் சாதனை தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் இருந்த திமுக, அன்று ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்தது. அதை திருத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு தற்பொழுது அமைந்துள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரை (CPR) DMK ஆதரிக்க வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.

News August 18, 2025

பிறப்பு மட்டுமே இல்லாத ஒரு போர்வீரன்!

image

‘ரத்தத்தை கொடுங்கள்.. நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்’ என முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலகின் கண்களில் இருந்து மறைந்த தினம் இன்று. அவரால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் இந்திய தேசிய ராணுவத்தில்(INA) இணைந்து பிரிட்​டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். ஆகஸ்ட் 18, 1945-ல் தைவானில் விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

News August 18, 2025

துணை ஜனாதிபதி தேர்தல்.. திமுகவுக்கு புதிய நெருக்கடி

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். CPR-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், தமிழரை திமுக புறக்கணித்து விட்டதாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது NDA பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!