News August 4, 2024
கனமழை வெளுத்து வாங்குகிறது

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 13, 2026
அனுஷ்காவுக்கு டும் டும் டும்.. இவர்தான் மாப்பிள்ளை!

இந்திய சினிமாவின் தேவசேனா என வர்ணிக்கப்படும் நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அனுஷ்காவின் குடும்பத்தினருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவருடன்தான் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாம். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களது திருமணத்தை நடத்தி முடிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 13, 2026
அமெரிக்கா – ஈரான் போரால் ரஷ்யாவுக்கு ஜாக்பாட்

USA-ஈரான் போரால் குறுகியகால நோக்கில் ரஷ்யா அதிக பலனடைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *ஈரானுடன் போர் காரணமாக உக்ரைனுக்கு ஏவுகணைகள் கொடுப்பதை USA குறைத்துள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதகமானது. *ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தேவை அதிகரித்துள்ளது, அதன் வருமானத்தை உயர்த்தும். *ஈரானின் Shahed ட்ரோன்கள் சப்ளை முடங்கினாலும், சீனாவின் உதவியால் அதை ரஷ்யா ஈடுசெய்துவிடும்.
News March 13, 2026
ரஜினியை திமுக மிரட்டியதா? திருமா ரியாக்ஷன்

ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என திமுக மிரட்டியதாக ஆதவ் அர்ஜுனா கூறியது ஒரு கற்பனை என்று திருமா தெரிவித்துள்ளார். ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் அதிகாரம், ஆட்சி போன்றவற்றுக்கு ரஜினி மயங்க கூடியவர் அல்ல எனவும் கூறியுள்ளார். வலதுசாரிகளின் ஆதிக்கம் மேலோங்கும் சூழலில் அரசியல் தமக்கு உகந்ததது அல்ல என்பதை உணர்ந்து அவர் விலகிவிட்டதாகவும் திருமா பேசியுள்ளார்.


