News August 4, 2024
ஐஃபோன் பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஐஃபோன், ஐபேட் மற்றும் மேக் பயனாளர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிள் தயாரிப்புகள் பாதிப்புகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்த சாதனங்கள் உளவு பார்க்கப்படுவதாகவும், தரவுகள் திருடப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ள CERT-In, மென்பொருளை அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 6, 2026
மகளிருக்கு.. ஸ்டாலின் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி

திராவிட மாடல் 2.0-வில், புதிய அறிவிப்புகளை துறைவாரியாக இன்று வெளியிடவுள்ளதாக CM அறிவித்துள்ளார். ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தில் பெறப்பட்ட மக்களின் யோசனைகளை தொகுத்து, அதில் நிறைவேற்ற வாய்ப்புள்ளவற்றை அவர் அறிவிக்கவுள்ளார். இதில், மகளிர் உரிமைத் தொகை உயர்வு எப்போது முதல் வரவு வைக்கப்படும், ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை இன்ப அதிர்ச்சியாக CM வெளியிடலாம் என கூறப்படுகிறது.
News March 6, 2026
லஞ்ச வழக்கில் சிக்கிய திமுக MLA? வீடியோ ஆதாரத்துடன் ED

அமைச்சர் நேருவுக்கு எதிரான ED அறிக்கையில் பாளையங்கோட்டை திமுக MLA அப்துல் வஹாப்பின் பெயரும் அடிபடுவதால் அறிவாலயத்தை புது புயல் ஆட்டிப்பார்க்க தொடங்கியுள்ளதாக பேசப்படுகிறது. ED அறிக்கையில், CM பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக நிதி திரட்டுவதாக கூறி, நகராட்சி அதிகாரிகள் 43 பேரிடம் இருந்து தலா ₹1 லட்சத்தை MLA வசூலித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாம். இதற்கு வீடியோ ஆதாரங்களும் இருக்கிறது என்கின்றனர்.
News March 6, 2026
2-வது குழந்தை பெறுவோருக்கு ₹25,000..

பிறப்பு விகிதத்தை உயர்த்த புதிய திட்டத்தை AP அரசு பரிசீலித்து வருகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தையை பெறுவோருக்கு, ₹25,000 ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் கருவுறுதல் விகிதத்தை 1.5-ல் இருந்து 2.1 ஆக உயர்த்துவதே அரசின் நோக்கம் என கூறியுள்ளார். மேலும், மக்கள் தொகை மேலாண்மைக்கான புதிய கொள்கை மார்ச் இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளதாம்.


