News August 4, 2024

துப்பாக்கி சுடுதல் வீரர்களை பாராட்டிய அமைச்சர்

image

இந்திய அளவில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டி மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 17 தங்கம் உட்பட 75 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு NCC மாணவர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும், மாணவர்களை சிறப்பாக பயிற்றுவித்த NCC ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களை உதயநிதி பாராட்டினார்.

Similar News

News March 6, 2026

சென்னையில் 2 சிறுவர்கள் துடிதுடித்து பலி

image

அயனாவரம் பகுதியைச் சேர்ந்தோர் சஞ்சய்(12). அவரது நண்பர் பிரவீன்(12). இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ரயில்வேக்கு சொந்தமான ஏரியில் குளிக்க சென்றுள்ளார். ஏரியின் ஆழத்தில் சென்றதால் சேற்றுக்குள் சிக்கி துடிதுடித்து உயிரிழந்தனர். போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர்.

News March 6, 2026

இசை நிகழ்ச்சி காரணமாக நள்ளிரவு வரை மெட்ரோ சேவை

image

சென்னையில் நடைபெறும் ஹிப்ஹாப் ஆதி இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை 7ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நந்தனம் – விம்கோ நகர் மற்றும் நந்தனம் – விமான நிலையம் வழித்தடங்களில் ரயில்கள் நள்ளிரவு வரை இயக்கப்படும். ஹிப்ஹாப் தமிழா இசை நிகழ்ச்சிக்கான ஸ்பான்சர் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் இலவசமாக மெட்ரோவில் பயணம் செய்யலாம் என்ற தெரிவித்துள்ளது

News March 6, 2026

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமக தலைவர் மனு தாக்கல்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், பாமக சார்பில் போட்டியிட,பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!