News August 4, 2024
சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 7 மணி வரை 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 1, 2026
சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 1, 2026
காரைக்குடி: கேஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

காரைக்குடி டிடி நகரில் கருப்பையா என்பவரது வீட்டில் ஜன.30 அன்று கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் கருப்பையா, லட்சுமி (ம) தெய்வானை ஆகிய 3 பேரும் தீயில் கருகி காயமடைந்தனர். தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பையா, லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து காரைக்கடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.
News February 1, 2026
சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; அதிரடி தீர்ப்பு

புதுவயலை சேர்ந்த கூலித்தொழிலாளி அடைக்கலம், இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை துாக்கி சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அடைக்கலத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ 5 லட்சம் வழங்க உத்தரவிட்டது.


