News August 4, 2024

டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1,28,913.5 கோடி சரிவு

image

தொடர் வளர்ச்சியை கண்டு வந்த இந்திய பங்குச்சந்தை, வர்த்தக வார இறுதியில் கடும் சரிவை எதிர்கொண்டது. இதன் எதிரொலியாக, டாப் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே வாரத்தில் ₹1,28,913.5 கோடி சரிந்தது. அதிகபட்சமாக TCS-இன் மதிப்பு ₹37,971.83 கோடி குறைந்து, ₹15,49,626.88 கோடியாக சரிந்தது. அதேபோல இன்ஃபோசிஸ், ஐடிசி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பும் அதிகளவில் சரிந்தன.

Similar News

News February 25, 2026

வெள்ளி விலை இன்று ஒரே நாளில் ₹5,000 மாறியது!

image

நேற்று கிலோவுக்கு ₹10,000 குறைந்த வெள்ளியின் விலை, இன்று(பிப்.25) ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால், சில்லறை விலையில் வெள்ளி 1 கிராம் ₹295-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,95,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் தங்கம் <<19233082>>விலை இன்று ₹320<<>> உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 25, 2026

ரஜினிகாந்த் பெயரில் ஒரு கிராமமா.. அடேயப்பா..!

image

ரஜினிக்காக ரசிகர்கள் பச்சை குத்தி பார்த்திருப்போம், கோயில் கட்டி பார்த்திருப்போம், ஆனால் அவர் பெயரை ஒரு கிராமத்தின் அடையாளமாக வைத்திருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புனேவின் மாவடி கடேபதர் கிராமம் ரஜினிகாந்த் கிராமம் என அழைக்கப்படுகிறது. ரஜினிகாந்தின் மூதாதையர்கள் தங்கள் மண்ணை சேர்ந்தவர் என்று அந்த கிராமத்தினர் நம்புகிறார்கள். ரஜினி குறித்த செய்தி வந்தாலே அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டுமாம்.

News February 25, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!