News August 4, 2024

போராட்டம் அறிவித்தார் வைகோ

image

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வு மோசடி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது, பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு ஆகியவற்றை கண்டித்து வரும் 14ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

Similar News

News February 9, 2026

தமிழன் மலேசியாவில் ஒன்னு, ஒடிசாவில் ஒன்னா? ரகுபதி

image

மலேசியாவில் தமிழர்களை புகழ்ந்து பேசும் PM மோடி, ஒடிசாவுக்கு சென்றால் தமிழர்களை திருடன் என பேசுவது ஏன் என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். PM மோடி தனது மலேசிய பயணத்தின்போது <<19077367>>தமிழ், தமிழர்களின் பண்பாடு சிறந்தது<<>> என புகழாரம் சூட்டியிருந்தார். அது குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, இது முற்றிலும் நாடகம் எனவும், பாஜகவின் நாடகத்தை தமிழக முருக பக்தர்கள் அறிவார்கள் என்றும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News February 9, 2026

விசில் தடைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: TNCA

image

உலகக்கோப்பை போட்டியையொட்டி சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில், மைதானத்தில் விசில் தடை செய்யப்பட்டதில் தங்களுக்கோ BCCI-க்கோ தொடர்பில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) விளக்கம் அளித்துள்ளது. தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதி தொகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

News February 9, 2026

அண்ணாமலை விலகியது குறித்து பாஜக ஆலோசனை

image

தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு <<19045262>>அண்ணாமலை அறிவித்திருந்தார்<<>>. பாஜகவில் நிலவும் கருத்து வேறுபாடே அவரின் இந்த முடிவுக்கு காரணம் என பேச்சு எழுந்தது. இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் பாஜக தேர்தல் அறிக்கை மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலையின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!