News August 4, 2024
கடலூர் கலெக்டர் முன்னிலையில் ஆய்வு கூட்டம்

கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமப் பகுதிகளில், வெள்ள அபாய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா தலைமை வகித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், வெள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Similar News
News March 18, 2026
நேமம்: லாரி மோதி மூதாட்டி பலி

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த நேமம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மனைவி காசியம்மாள்(85). இவர் நேற்று கருவேப்பி லங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக கரும்பு ஏற்றி வந்த லாரி, காசியம்மாள் மீது மோதியதில் படுகாயமடைந்தார். உடனே அவரை, மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News March 18, 2026
புதுக்குப்பம்: நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

ரெட்டிச்சாவடி அடுத்த புதுக்குப்பம் பகுதியில் நேற்று 4 வயது ஆண் மான் ஒன்று இரை தேடி வந்தது. அப்போது நாய்கள், மானை துரத்தி சென்று கடித்ததில், காயமடைந்து பயந்து ஓடிய மான் அங்கிருந்த இரும்பு வேலி மீது மோதி கீழே விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கடை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News March 18, 2026
கடலூர்: வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் கைது

வடக்கு மேலூர் ரோஜா நகரை சேர்ந்தவர் சுமதி(43). இவரது விவாகரத்து பெற்ற முன்னாள் கணவர் மானடிக்குப்பத்தைச் சேர்ந்த இளவரசன்(43), குடிபோதையில், சுமதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நெய்வேலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இளவரசனை போலீசார் இன்று கைது செய்தனர்.


