News August 4, 2024

யார் இந்த கிட்டு (எ) ராமகிருஷ்ணன்?

image

நெல்லை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிட்டு (எ) ராமகிருஷ்ணன் நீண்ட அரசியல் அனுபவம் உடையவர். 25ஆவது வார்டு கவுன்சிலராக உள்ள அவர், மூன்று முறையாக நெல்லை மாநகர கவுன்சிலராக இருந்துள்ளார். கட்சியிலும், கவுன்சிலர்களிடம் அவருக்கு ஆதரவு உள்ளதால், திமுக தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. புதிய மேயர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

Similar News

News March 14, 2026

விஜய் எடுக்கப்போகும் முடிவு.. என்ன நடக்கும்?

image

அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லும் என்பதே இன்றைய ஹாட் டாபிக். ஒருவேளை விஜய் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், தொடக்கம் முதலே கொள்கை எதிரி என கூறிவந்த பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேச்சு எழும். செல்லவில்லையென்றால், திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கும் வாக்கு வங்கியில் பாதிப்பு உண்டாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News March 14, 2026

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

image

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News March 14, 2026

பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குக

image

போர் பதற்றத்துக்கிடையே பலரும் கேன், டின்களில் பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றனர். இதனையடுத்து, இவ்வாறு பாதுகாப்பின்றி எரிபொருள் வழங்கக்கூடாது என இந்திய ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியது. ஆனால் இதை வாடிக்கையாளர்களிடம் கூறினால், அவர்கள் ஊழியர்களை மிரட்டுவதாக பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். எனவே, TN-ல் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி DGP-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

error: Content is protected !!