News August 4, 2024
தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை: சுரேஷ் கோபி

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார். நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே முதல் பணி எனக் கூறிய அவர், மாயமானோர் குறித்த விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். மீட்புப்பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவைப்பட்டால், மத்திய அரசு வழங்கும் எனவும் கூறினார்.
Similar News
News March 12, 2026
கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

மக்களின் வாழ்க்கைமுறை, மரபணு & வானிலையை பொறுத்து சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரிக் ஆசிட் & தொற்றை ஏற்படுத்தும் ஸ்ட்ரூவைட் போன்றவையே சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும். சில பாக்டீரியா தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். இவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. சிலருக்கு மரபணு ரீதியாகவும் சிறுநீரகத்தில் கற்கள் வருமாம்.
News March 12, 2026
அதிமுகவுடன் கூட்டணி.. கடைசிநேரத்தில் அறிவித்தார்

NDA கூட்டணியில் புதிய கட்சியாக முல்லை மக்கள் பேரவை இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற NDA கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் நாசே ராமச்சந்திரனும் பங்கேற்றார். இதனையடுத்து, வரும் தேர்தலில் NDA-வுக்கு முல்லை மக்கள் பேரவை ஆதரவளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸில் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த நாசே ராமச்சந்திரன், புதிய கட்சி தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
ஜனநாயகன் ஓடிடி உரிமம் ரத்தானதா?

சென்சார் சிக்கலால் விஜய்யின் ஜனநாயகன் ரிலீசில் தாமதம் நீடிக்கிறது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை ₹120 கோடிக்கு வாங்கிய சம்பந்தப்பட்ட நிறுவனம், ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், இதுபற்றி படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இதனிடையே, அடுத்த வாரம் ரிவைஸிங் கமிட்டி, படத்தை பார்த்து சென்சார் சான்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


