News August 4, 2024

‘வாழை’ படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியீடு

image

‘வாழை’ படத்தின் 3ஆவது பாடலான ‘ஒத்தச்சட்டி சோறு’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை தற்போது இயக்கி, தயாரித்து வருகிறார். நடிகர்கள் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற 23ஆம் தேதி ‘வாழை’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Similar News

News January 26, 2026

ஒரு யூனிட் மின்சாரம் ₹3.50-க்கு கிடைக்க வாய்ப்பு!

image

மகாராஷ்டிராவில் 2 தோரியம் அடிப்படையிலான மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. உலகளவில் யுரேனியம் மூலம் அதிக மின்சாரம் பெறப்படும் நிலையில், தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும் ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற குறைந்த விலையில் மின்சாரம் இனி கிடைக்கும். TN-ல் தற்போது பயன்பாட்டை பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ₹4.95 – ₹12 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.

News January 26, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

News January 26, 2026

2026, 2031-ல் திமுக ஆட்சி தான்: ராஜ கண்ணப்பன்

image

பார்லிமெண்ட் தேர்தலில் PM மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்தார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். மேலும், 2026, 2031-ல் திமுக தான் மீண்டும் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றவர், சுதந்திரம் அடைந்து மக்களுக்கு தேவையான குடிநீர், பாசனம், போக்குவரத்து, உணவு, கல்வி என அனைத்தும் திமுக ஆட்சியில் தான் சீர் செய்யப்பட்டுள்ளது எனவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!