News August 4, 2024
தமிழக பாஜக தலைவர் மாற்றம்?

தமிழக பாஜக தலைவராக வானதி சீனிவாசனை நியமிக்க, அக்கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அண்ணாமலை படிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதால், பொறுப்புத்தலைவர் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. இதனிடையே, நயினார் நாகேந்திரன் பெயரும் தலைவர் பதவிக்கு அடிபட்டது. இதனால், தலைவர் மாற்றம் என்பது உறுதியாகிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News April 9, 2026
திருச்சி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.
News April 9, 2026
அதிமுக + விஜய் கூட்டணி.. பரபரப்பை கிளப்பினார்

அதிமுக, தவெக இடையேயான கூட்டணி பேச்சு தொடர்பாக செங்கோட்டையன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். விஜய் ஆதரவுடன் CM-ஆகி ₹5,000 கோடி சம்பாதிக்கலாம் என EPS நினைத்தார். அதற்கு நான் தடையாக இருந்ததால் அவருக்கு என் மீது ஆத்திரம் என அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை விட்டுக் கொடுத்ததற்கான பரிசுதான் துரோகி என்ற பட்டம் எனவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
News April 9, 2026
மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. அமைச்சரவை ஒப்புதல்

மகளிர் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 2011 சென்சஸ் அடிப்படையில், 2029 முதல் லோக்சபா தொகுதிகள் 543-ல் இருந்து 816-ஆக உயரும். இதில் 33% அதாவது 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும். ஏப்ரல் 16-ல் தொடங்கும் 3 நாள் சிறப்பு அமர்வில் இம்மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


