News August 4, 2024

நிதிஷ்குமார் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அலுவலகத்திற்கு அல்கொய்தா அமைப்பின் பெயரில் மிரட்டல் வந்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் அலுவலகம் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படும், அதை சிறப்புப்படை போலீசாராலும் தடுக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரும், தீவிரவாத தடுப்புப்படையினரும் விசாரிக்கின்றன.

Similar News

News January 18, 2026

புதுக்கோட்டை: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

புதுக்கோட்டை மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 18, 2026

யாருடன் கூட்டணி? மீண்டும் பிரேமலதா ஆலோசனை!

image

திமுக, அதிமுக, தவெக என 3 வாய்ப்புகள் இருப்பதால் எந்த பக்கம் செல்வது என முடிவெடுக்காமல் பிரேமலதா யோசனையில் உள்ளார். அதனால் தான் கடந்த 9-ம் தேதி கூட்டணி முடிவை வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்று MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி தேமுதிக அலுவலகத்தில் MGR சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், முக்கிய நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

News January 18, 2026

கேஸ் சிலிண்டர் சீக்கிரமாக காலியாகாமல் இருக்க…

image

*பர்னர் சுத்தமா இருக்கணும். அழுக்கு இருந்தால், நெருப்பு அதிகமாக தேவைப்படும் *தட்டையான பாத்திரத்தை பயன்படுத்தும் போது, நெருப்பு சமமாக பரவி சீக்கிரமாக சமையல் ஆகும் *அரிசி, பருப்பு, சுண்டல், மொச்சை போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வேகும் *பாத்திரத்தை கழுவிய உடனே ஈரத்துடன் அடுப்பில் வைக்க வேண்டாம். அதே போல, fridgeல் இருந்து எடுத்தவுடன் காய்கறிகளை அடுப்பில் போட வேண்டாம்

error: Content is protected !!