News August 4, 2024
கோயில் சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி

மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து, 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாபூரில் உள்ள பாபா கோயிலில் ஆன்மிக நிகழ்வின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஏராளமான குழந்தைகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரேவாவில் 2 நாள்களுக்கு முன், சுவர் விழுந்து 4 குழந்தைகள் பலியான நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Similar News
News March 12, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று(மார்ச்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 12, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News March 12, 2026
கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல்: EPS

திமுக கூட்டணியில், அதன் கூட்டணிக் கட்சிகள் அடிமையாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் மோசமான, கையாலாகாத திமுக அரசை அகற்றுவதே அதிமுக கூட்டணியின் நோக்கம் என்றார். இந்த தேர்தல் தான் கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல் எனவும் கூறினார். மேலும், காங்கிரஸிடம் கெஞ்சி திமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


