News August 4, 2024
1,000 கி.மீ தொலைவில் தேர்வு மையத்தால் தேர்வுகள் அதிருப்தி

முதுநிலை நீட் தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டதற்கு, தேர்வாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வரும் 11ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், சிலருக்கு தேர்வு மையங்கள் 1,000 கி.மீ தூரம் தாண்டி ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச்சேர்ந்த பலருக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 259 இடங்களில் தேர்வு நடந்த நிலையில், தற்போது அது 185 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
மார்க் சாதனையை முறியடித்த 22 வயது இந்தியர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சூர்யா மிதா அமெரிக்காவில் 2023-ல் நண்பர்களுடன் சேர்ந்து Mercor என்ற AI கம்பெனியை தொடங்கினார். இந்த கம்பெனியின் மதிப்பு $10 பில்லியனாக ஆனதால், சூர்யாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு $2.2 பில்லியன் (₹18,000 கோடி) ஆனது. இந்நிலையில் 2026 Forbes லிஸ்டில் சூர்யா இளம் தொழிலதிபராக 22 வயதிலேயே பில்லியனராகி மார்க் சாதனையை முந்தியுள்ளார். மார்க் 23 வயதில் பில்லியனரானார்.
News March 13, 2026
ராமதாஸ் ஐகோர்ட்டில் அவசர முறையீடு

கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தொடர்பாக ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்துள்ளது. வழக்கு விசாரணைக்கு உரிமையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், ஐகோர்ட்டை ராமதாஸ் நாடியுள்ளார். மேலும், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்ததையும், அன்புமணி தரப்பு மறைத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 13, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. விலை பாதியாக குறைந்தது

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக, கேஸ் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் முதல் தள்ளுவண்டி உணவுக் கடை வரை மூடப்பட்டதால், கோயம்பேடு சந்தையில் மட்டும் தக்காளி, வெங்காயம், கீரை உள்ளிட்ட காய்கறிகள் 2,000 டன் அளவிற்கு தேக்கம் அடைந்துள்ளன. இதனால் காய்கறிகளை பாதி விலையில் விற்பனை செய்தாலும், வாங்குவதற்கு ஆளின்றி வீணாவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


