News August 4, 2024
பதக்கம் வென்ற பெலாரஸ் வீரருக்கு நேர்ந்த சோகம்

தேசிய கொடி, தேசிய கீதம் இசைக்காமல் ட்ராம்போலின் போட்டியில் ஒருவர் பதக்கம் பெற்றுள்ளார். உக்ரைன் போர் காரணமாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், இவ்விரு நாடுகளின் வீரர்களும், AIN என்ற நியூட்ரல் அணியின் கீழ் விளையாடி வருகிறார்கள். இதனால் பெலாரஸ் வீரர் லிட்விநோவிச், தங்கப் பதக்கம் வென்றும், தங்கள் நாட்டின் கொடியை பயன்படுத்த முடியவில்லை.
Similar News
News March 21, 2026
கடன் தள்ளுபடி.. வெளியாக போகும் திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், *மாணவர்களின் கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி *சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ₹10,000 வரை மானியம் *மகளிருக்கு சிறப்பு உரிமைத்தொகை *சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி *நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா & கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாம்.
News March 21, 2026
அன்புமணிக்கு ஆட்டம் காட்ட தயாரான ராமதாஸ்!

அதிமுக கூட்டணியில் அன்புமணியை வீழ்த்தவே <<19435845>>சசிகலாவுடன் ராமதாஸ்<<>> கைகோர்த்துள்ளதாக பேசப்படுகிறது. குறிப்பாக தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாமக(அன்புமணி) வேட்பாளர்களை தோல்வியடைய வைக்கும் நோக்கில், அன்புமணியால் பதவியை இழந்தவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பலம் வாய்ந்த வேட்பாளர்களை இறக்கினால் அன்புமணி தரப்புக்கு தலைவலியாக மாற வாய்ப்புள்ளதாம். நீங்க என்ன சொல்றீங்க?
News March 21, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. ஓபிஎஸ் ஷாக்

திமுகவில் OPS இணைந்ததால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் பலர் அதிமுகவிற்கு திரும்புகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்ட OPS அணியின் நகர செயலாளர் சேகர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். ஒன்றிய செயலாளர்கள் கனகராஜா, தியாகராஜன், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும் EPS-ஐ நேரில் சந்தித்து, தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தனது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவது OPS-க்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


