News August 4, 2024
விபத்தில் சிக்கிய ஒருவர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் அருகே நிவேஷ் மற்றும் ஹரி ஆகிய இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது, எதிரில் வந்த ஜீப் மீது நேருக்கு நேர் மோதினார்கள். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். வாகனத்தை ஓட்டி வந்த ஹரி ஜீப் மீது மோதி, மேலே பறந்து முன் பகுதியில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஹரி உயிரிழந்தார்.
Similar News
News January 12, 2026
ஈரோடு அருகே ஆண் சடலம்! திடுக்கிடும் தகவல்

தமிழக – கர்நாடக எல்லையான காரைக்காடு காவேரி ஆற்றங்கரையில், பாதி எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முல்சந்த்பால் என்பதும், சுற்றுலா வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் தெரியவந்தது. உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், உறவினர்கள் அங்கேயே உடலை எரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
News January 12, 2026
புஞ்சைப்புளியம்பட்டி: பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

புஞ்சைப்புளியம்பட்டி புதுரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாகப் பணம் வைத்துச் சூதாடிக்கொண்டிருந்த ஒரு கும்பலைப் பிடித்தனர். இது தொடர்பாக ரகு, சுரேஷ் பாபு, விஜயகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.