News August 4, 2024
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 4) காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவதாகவும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்ததையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் ரத்து

திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா ஒட்டி நேற்று முதல் நாளை மறுநாள் வரை மூலவர் முருகப்பெருமானுக்கு காலை, 9:00 மணி முதல் நண்பகல், 11:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. இதனால் 2 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 23, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரி விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
திருவள்ளூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


