News August 4, 2024
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (ஆகஸ்ட் 4) காலை ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி விடுவதாகவும், குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்ததையடுத்து, ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News August 20, 2025
சென்னையில் நாளை கரண்ட் கட்!

சென்னையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கரணை மீனாட்சி நகர், பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஆண்டனி நகர், புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் ரோடு, வீராசெட்டி தெரு, திருவான்மியூர் சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர் 1 முதல் 3வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும். ஷேர்!
News August 20, 2025
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறை தினங்களான ஆக.23, 24 ஆகிய தேதிகளை முன்னிட்டு 1,040 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களுக்கு வெள்ளியன்று 340 பேருந்துகளும், சனியன்று 350 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. திருப்பூர், கோவை & ஈரோட்டிலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
News August 20, 2025
சென்னை ஐகோர்ட் வேலை! APPLY NOW

சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி நிரலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்குB.Sc(Computer Science), B.Sc (IT), BCA, MCA,M.Sc (Computer Science) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.1,31,500 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <