News August 4, 2024

உங்கள் நண்பனை பற்றிக் கூறுங்கள்

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. உங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, கிரிக்கெட் விளையாடியது, சினிமாவிற்கு சென்றது என பல சுவாரஸ்யமாக விஷயங்களை செய்திருப்போம். சினிமாவை மிஞ்சும் அளவுக்குகூட சில சேட்டைகளை செய்திருப்போம். அந்த வகையில், உங்கள் நண்பனுடனான நினைவுகளை கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க. ‘HAPPY FRIENDSHIP DAY’

Similar News

News August 18, 2025

சென்னையில் இங்கு தண்ணீர் வராது! ALERT

image

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18-ம் தேதி 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18-ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19-ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)

News August 18, 2025

சென்னையில் விநாயகர் சிலைகளைக் கரைக்க 6 இடங்கள்

image

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைக்க சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், பல்கலை நகர், நீலாங்கரை, பாலவாக்கம் மற்றும் காசிமேடு ஆகிய இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை கரைக்க சென்னை மாநகராட்சி இந்த 6 இடங்களைத் தேர்வு செய்துள்ளது. மேலும், சிலைகளைக் கரைக்கும்போது, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 18, 2025

சென்னைக்கு மழை இருக்கு

image

வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்டிபடி சென்னைக்கு அடுத்த 2 நாள்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!