News August 4, 2024
உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக மேல்முறையீடு?

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என லோக் ஜன சக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். எஸ்சி கோட்டாவில் கிரிமீலேயரை அனுமதிக்க முடியாது என்ற அவர், எஸ்சி ஒதுக்கீட்டுக்குள் உள்ஒதுக்கீட்டை அனுமதிப்பது, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றாது என்றார்.
Similar News
News November 1, 2025
அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம்!

அதிதீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளதாக அம்மாநில CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். உலக வங்கியின் வரையறைப்படி தீவிர வறுமை என்பது தனிநபரின் தினசரி வருமானம் ₹180 ஆகும். கேரளாவில் 2021-ல் 64,006 குடும்பத்தினர் இந்த பட்டியலில் இருந்தனர். அரசின் உதவிகளால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேலே சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. TN-ல் 2024 தகவலின்படி 2.2% பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
News November 1, 2025
கரூரில் விஜய் பேசிய இடத்தை 2-வது நாளாக அளக்கும் CBI

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக CBI அதிகாரிகளின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறைக்கு பின் நேற்றிலிருந்து மீண்டும் அவர்கள் விசாரணையை தொடங்கினர். கூட்டம் நடைபெற்ற சாலையின் பரப்பு, அமைப்பு ஆகியவற்றை நேற்று நவீன கருவிகளுடன் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்றும் 2-வது நாளாக வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடைபெற்ற சாலையை அளவிட்டு ஆய்வு செய்தனர்.
News November 1, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

மாதத்தின் முதல் நாளான இன்று(நவ.1) தங்கம் உயர்வுடன் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹11,310-க்கும், சவரன் ₹90,480-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹166-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


