News August 4, 2024

பருப்பு, பாமாயில் இம்மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கோவையில் உள்ள 11,04.867 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

Similar News

News November 16, 2025

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பட்டணம் , பட்டணம் புதூர் , சத்தியநாராயணபுரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம். ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 16, 2025

கோவையில் வசமாக சிக்கிய நபர்!

image

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆர்.எஸ். புரம் காவல்துறையினருக்கு நேற்று முந்தினம் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குப் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பாலச்சந்திரன் (57) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

News November 16, 2025

சிலம்பம் போட்டியில் வெள்ளி வென்ற கோவை மாணவி!

image

கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று (நவ.15) மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், 2- ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்ற +1 மாணவி ரித்திகாவை, மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் நேரில் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாணவியின் தந்தை ராமன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பிரின்ஸ், தொண்டர் அணி பகுதி துணை அமைப்பாளர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!