News August 4, 2024

சிவகாசியில் புதிய காலண்டர்கள் அறிமுகம்

image

சிவகாசியில் உள்ள அச்சகங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று அடுத்த ஆண்டுக்கான தமிழ், தெலுங்கு காலண்டர்கள் வெளியிடப்படும். அந்த வகையில் நேற்று 2025 ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் கடிகாரம் பொருத்திய காலண்டர், 234 சட்டமன்ற தொகுதி குறித்த விவரங்கள் அடங்கிய புதிய காலாண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு விலை 10% உயர்த்தப்பட்டுள்ளது.

Similar News

News December 21, 2025

விருதுநகர் அருகே காதலி வீட்டில் இளைஞர் தற்கொலை!

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூரைச் சேர்ந்தவர் ஓட்டுநர் தங்கபாண்டி (30). திருமணமாகாத இவர், தனது உறவினரான சிவகாசி கங்காகுளத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி அப்பெண்ணின் வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

விருதுநகர்: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

image

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 21, 2025

ராஜபாளையம்: கல்லை தூக்கிப்போட்டு கொன்ற நண்பன் கைது

image

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சமுசிகாபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(37), கூலித் தொழிலாளி. நண்பர் பாலமுருகன்(23), இருவரும் ஊரணி அருகே மது அருந்தினர். இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. பாலமுருகன் ஆத்திரத்தில் வேல்முருகனை கீழே தள்ளி கல்லை எடுத்து தலையில் போட்டதில் அவர் உயிரிழந்தார். கீழராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!