News August 4, 2024
அடுத்தடுத்து சிக்கும் திமுகவினர்

புதுக்கோட்டையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே, திமுகவைச்சேர்ந்த ஜாபர் சாதிக், ராமநாதபுரம் இப்ராஹிம் உள்ளிட்டோர் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதாகியிருப்பது, குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 28, 2025
வின்னிங் கோச்சாக விரும்பவில்லை: கம்பீர்

நான் எப்போதும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை, இந்தியாவை பயமற்ற அணியாகவே உருவாக்க விரும்புகிறேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். ஹெட் கோச் கம்பீர் வழிகாட்டுதலில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, ஆஸி., உடனான ODI தொடரை இழந்தது. ஆஸி.,க்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் ஆட்டத்தின் மீது முழுக் கவனத்தையும் செலுத்துவோம் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.
News October 28, 2025
விஜய் வாய் திறப்பாரா? ரவிக்குமார் MP

SIR பணிகளை தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜக மேற்கொள்ளும் வாக்குத் திருட்டு என்று தமிழகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் எதிர்க்கின்றனர் என விசிக MP ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பாஜகவை தனது கொள்கை எதிரி என கூறும் தவெகவும் இதனை எதிர்க்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் வாய் திறப்பாரா என்றும் கேட்டுள்ளார். கரூர் துயருக்கு பிறகு சமூக பிரச்னைகளுக்கு தவெக குரல் கொடுக்கவில்லை.
News October 28, 2025
வெந்நீர் குளியலின் நன்மைகள்

வெந்நீரில் குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை தருகிறது. மழைக்காலத்தில் பெரும்பாலும் அனைவரும், வெந்நீரில் குளிப்பது வழக்கம். அந்த வகையில், வெந்நீரில் குளிப்பதால், என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படும் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.


