News August 4, 2024
திருவண்ணாமலையில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
தி.மலை: நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்!

ஆரணி வட்டம், சேவூர் கிராமம், ஆரணி-வேலூர் சாலையில் நேற்று (நவ.2) செய்யார் வட்டம் வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 3, 2025
திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
மாணவி பலாத்காரம் – வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்துார் அடுத்த வசூர் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர், கடந்த 2022, மார்ச் 11ல், 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, குற்றவாளி சிவாவிற்கு, 20ஆண்டு சிறை மற்றும் 20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


