News August 4, 2024
கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்க: OPS

தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென OPS வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 80% பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிவருவதாகக் கூறிய அவர், அந்த ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அரசுப்பணியை திமுக அரசு உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News August 23, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு வழங்குவது உறுதி?

<<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000 <<>>வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
News August 23, 2025
அமித் ஷாவுடன் CP ராதாகிருஷ்ணன் சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் CP ராதாகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, CP ராதாகிருஷ்ணன் அனுபவமிக்க தலைவர் எனவும் நிர்வாகத் திறன் கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஆர் தேச நலனுக்காக அளப்பரிய தொண்டாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
News August 23, 2025
TVK மீது பாயும் விமர்சனங்கள்.. React செய்த விஜய்

தவெகவின் மதுரை மாநாட்டுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அளவு பேரன்பு காட்டும் நபர்களை உறவுகளாக பெற என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை என பதிவிட்ட அவர், தவெக மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம் எனவும் அல்லவையை புறந்தள்ளி புன்னகைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார்.