News August 3, 2024

காவிரி தாய்க்கு மங்களப் பொருட்கள் வழங்கிய ரங்கநாதர்

image

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளி, காவேரி தாய்க்கு பட்டுப் புடவை, மலர் மாலை, சந்தனம், குங்குமம், தாலி பொட்டு, அலங்காரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்களை யானை மீது அமர்ந்து ஆற்றில் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Similar News

News October 19, 2025

திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட பொருட்கள் ஒப்படைப்பு

image

திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வாகனங்கள், மொபைல் போன்கள் திருடு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர நடவடிக்கைகளின் அடிப்படையில் வாகனங்கள், திருடு போன 37 பவுன் தங்க நகைகள், மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு இன்று அந்தந்த உரிமையாளர்களிடம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வழங்கினார்.

News October 18, 2025

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News October 18, 2025

திருச்சி: அமெரிக்காவிற்கு பார்சல் சேவை தொடக்கம்

image

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் அமெரிக்காவிற்கு பார்சல் மற்றும் தபால் அனுப்பும் வசதி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 12 தபால் நிலையங்களிலும் இந்த சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!