News August 3, 2024
கோர விபத்துகளில் 10 பேர் பலி

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த 3 வெவ்வேறு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி 2 மகள்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஆசிரியர் உள்பட 4 பேரும், மதுரையில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை.
Similar News
News January 20, 2026
தாயாகும் தனுஷ் பட நடிகை.. PHOTOS VIRAL ❤️❤️

பாலிவுட் நடிகை சோனம் கபூர் இரண்டாவது முறையாக தாயாகப் போகிறார். தாய்மையின் அழகுடன் கருப்பு நிற ஆடையில் சோனம் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது வைரலாகியுள்ளது. நடிகர் அனில் கபூரின் மகளான அவர், 2018-ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார். தனுஷுடன் ‘ராஞ்சனா’ படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிச்சயமான முகமாக அவர் மாறினார்.
News January 20, 2026
WPL-ல் பாதியிலேயே விலகிய தமிழக வீராங்கனை

நடப்பு WPL-ல் தொடரில் இருந்து காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஜி.கமலினி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்துவீச்சாளர் வைஷ்ணவி சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக MI நிர்வாகம் அறிவித்துள்ளது. கமலினியின் காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 & ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News January 20, 2026
புதிய ரேஷன் கார்டுகள்.. தமிழக அரசு அறிவிப்பு

புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 2026 ஜனவரியில் சுமார் 50,000 பேருக்கு புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தகுதியானவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு கிடைக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


