News August 3, 2024
புதுவையில் புதிய ஆளுநர் 7-ஆம் தேதி பதவியேற்பு

புதுச்சேரி மாநிலத்தில் புதிய துணை நிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கைலாசநாதன் அவர்களை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் புதிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வரும் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரியில் உள்ள ராஜ் நிவாசில் பதவி ஏற்றுக்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Similar News
News August 9, 2025
புதுவையில் நூற்றாண்டு பழமையான மணிக்கூண்டு !

பிரெஞ்சு ஆட்சியில், புதுச்சேரியின் பெரிய வணிகரான லட்சுமணசாமி செட்டியார், ஒரு மணிக்கூண்டை அமைக்க விரும்பினார். இது பற்றி பிரெஞ்ச் அரசிடமும் தெரிவித்தார். 1892 ஆண்டு மைசூர் மன்னர் புதுவைக்கு வந்தார். அப்போது அவரே தங்க சொல்லுறில் சுண்ணாம்பு கலவை வைத்து மணிக்கூண்டு அமைக்க அடிக்கல் நாட்டினார். கடந்த 1921இல் 25 அடி உயரத்தில் மூன்று மாடிகளுடன் இந்த மணிக்கூண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதை ஷேர் செய்யுங்க !
News August 9, 2025
புதுச்சேரியில் இலவச இரத்ததான முகாம்

புதுச்சேரி காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில் வில்லியனூர் சுல்தான்பேட்டை முத்துக் குமரன் மஹாலில் மாபெரும் இலவச இரத்ததான முகாமை இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கியது. இந்த முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர்கள் தலைமை தாங்கினார்கள். மண்டல உதவி ஆளுநர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
News August 9, 2025
டி ஐ ஜி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி காவல்துறை தலைவர் டிஜிபி அறிவுறுத்தல் படி, புதுச்சேரி உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது. அதன்படி, திருபுவனை காவல் நிலையத்தில் டிஐஜி சத்திய சுந்தரம் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.