News August 3, 2024

ஆரணியில் 10 சவரன் தங்க நகை கொள்ளை

image

ஆரணி அருகே மருசூரில் சாந்தகுமார், சந்திரா வயதான தம்பதியரை 2 முகமூடி திருடர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் தாக்கிவிட்டு சந்திரா கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க செயின், 50,000 ரூபாய் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் 3 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படை போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரணி மக்களே கவனமாக இருங்கள்.

Similar News

News July 8, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம்

image

தி.மலை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் புகைப்படம் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தரிசனத்திற்காக இடைத்தரகர்கள் மற்றும் பிறரிடத்தில் பணம் தரக்கூடாது எனவும், பணம் வழங்கும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News July 8, 2025

வீட்டு வாடகை ஒழுங்குமுறை சட்டம் சொல்வது என்ன? (2/2)

image

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கான புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!