News August 3, 2024
மத்திய அமைச்சரிடம் மனு அளித்த கடலூர் எம்.பி.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத், இன்று (ஆகஸ்ட் 3) காலை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்தார். அப்போது அவர், நெய்வேலியில் உள்ள விமான நிலையத்தை UDAN திட்டத்தின் கீழ் விரைவில் மேம்படுத்தி பொதுமக்களுக்கான விமான சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.
Similar News
News September 14, 2025
கடலூர்: 4 வயது சிறுமி விபத்தில் பரிதாப பலி

ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா(25). இவர் தனது குழந்தைகள் அனித்ரா(4), ஆதிரன்(1) ஆகியோரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று, முன்னாள் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய டூவீலர் அபிநயாவின் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி அனித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
News September 14, 2025
கடலூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

கடலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <
News September 14, 2025
கடலூர்: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு மாவுகட்டு

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி சந்திரகலா (40). முன்விரோதம் காரணமாக இவரது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய 8 பேர் மீது நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜதுரையை (20) நேற்று போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராஜதுரைக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.