News August 3, 2024

வயநாட்டில் 3 நாள்கள் இலவச சேவை: BSNL

image

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில், 3 நாள்களுக்கு இலவச சேவை வழங்குவதாக BSNL அறிவித்துள்ளது. கடந்த 29ஆம் தேதி நிகழ்ந்த பேரழிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அங்கு நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. இந்நிலையில், வயநாடு மாவட்டம், நிலம்பூர் தாலுகாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படும் என BSNL தெரிவித்துள்ளது.

Similar News

News October 22, 2025

BIG NEWS: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூரில் நடைபெற இருந்த மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள், தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அக்.24 முதல் அக்.29-ம் தேதி வரை நடைபெற இருந்த தடகள போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கவிருந்தனர். இதனால், பாதுகாப்பு கருதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், போட்டிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

News October 22, 2025

அதி கனமழை எனக் கணக்கிடுவது எப்படி?

image

வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், மழைப்பதிவு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம். *24 மணி நேரத்தில் 21 செ.மீ-க்கு மேல் மழை பதிவானால் அது, அதி கனமழை. *12 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை பெய்தால் மிக கனமழை. *7 செ.மீ., முதல் 11 செ.மீ., வரை பெய்தால் கனமழை. *2 செ.மீ., முதல் 6 செ.மீ., வரை பெய்தால் மிதமான மழை என வானிலை ஆய்வு மையம் கணக்கிடுகிறது.

News October 22, 2025

கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. இந்நிலையில், மாநில கட்டுப்பாட்டு மையத்தில் DCM உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். மழை நிலவரம், பாதிப்புகள், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாநகராட்சி ஊழியர்கள், மீட்புப் படையினரை வேகமாக செயல்படவும் உதயநிதி அறிவுறுத்தினார்.

error: Content is protected !!