News August 3, 2024
இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

சீர்காழி அருகே விளைந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஆம்புலன்ஸ் இல்லாத குறையை போக்கும் விதமாக, விளைந்திடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜா தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட ஆம்புலன்சை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விளைந்திடசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையானது முற்றிலும் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 96556 61700 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News November 5, 2025
மயிலாடுதுறை: மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி சிறார் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பரிசோதனை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
News November 5, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாங்கனம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் பார்வையிட்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள மருந்து மாத்திரை கையிருப்பு விவரங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 5, 2025
மயிலாடுதுறை: வங்கியில் வேலை.. APPLY NOW!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


