News August 3, 2024
சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்குக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.exam.unom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 16, 2025
சென்னை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இன்று காலை முதல் TNSTC பேருந்து முன்பதிவு தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . 9445014436 என்ற எண்ணில் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறியலாம்.
News October 16, 2025
நடிகர் கார்த்திக் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஜா சூர்யா சாலையில் உள்ள நடிகர் கார்த்திக் முத்துராமன் வீட்டிற்கு, நள்ளிரவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. தகவலின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்த, அது வெறும் புரளி என தெரியவந்தது. மிரட்டல் இமெயிலை அனுப்பிய நபரை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 16, 2025
சன் பார்மா குறித்தான செய்தி- விளக்கம்

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன், அக்.09 அன்று மத்திய பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அச்செய்தி வெளியீட்டில், தவறுதலாக “சன் பார்மா” நிறுவனத்தின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது ஒரு உண்மைத் தவறு. இதற்கும் சன் பார்மா நிறுவனத்திர்க்கும் தொடர்பு இல்லையெனவும், புகைப்படம் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.