News August 3, 2024
ராணிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற கோவில்

ராணிப்பேட்டையில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள ரத்தனகிரி என்னும் மலையில் அமைந்துள்ளது ரத்தினகிரி முருகன் கோவில். இந்த கோவில் 14-நூற்றாண்டில் அருணகிரி நாதரால் கட்டப்பட்டது. குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இந்த கோவிலுக்கு சென்றால் குழந்தை பிறக்கும் என்ற ஐதீகம் உள்ளது. இந்த கோவில் மலையின் மேல் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு செல்லும் பொழுது பல இயற்கை காட்சிகளை காணமுடியும்.
Similar News
News September 12, 2025
வேப்பூர் அருகே வாலிபர் தலை நசுங்கி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதியின் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளரான மாளியப்பட்டு வேலு, தேங்காய் வியாபாரம் தொடர்பாக ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தேங்காய் விற்பனையோடு பம்பை அடிக்கும் தொழிலும் செய்து வந்தார்.
News September 11, 2025
மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு

ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையம் (IVPM) மற்றும் அரக்கோணம் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வருகிற 15.09.2025 முதல் தொடங்குகிறது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 11 வகையான தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கம். ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு 7010307003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News September 11, 2025
காவல்துறை இரவு வந்து பணி விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( செப் -11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100