News August 3, 2024
‘வீர தீர சூரன்’ 2ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘வீர தீர சூரன்’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘சேதுபதி’, ‘சித்தா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் அருண்குமார். இவர் தற்போது விக்ரமின் 62ஆவது படமான ‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கி வருகிறார். எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Similar News
News January 16, 2026
ரயில்வேயில் வேலை.. ₹45,000 வரை சம்பளம்

RRB-ல் Lab Assistant Gr. III, Senior Publicity Inspector, Chief Law Assistant உள்ளிட்ட 312 பணியிடங்கள் நிரப்படவுள்ளன *கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை வேலைக்கேற்ப மாறுபடும் *வயது: 18- 40 *தேர்வு முறை: கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு *வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹19,900- ₹44,900 *விண்ணப்பிக்க <
News January 16, 2026
பாஜக புதிய தேசிய தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

பாஜகவின் செயல் தலைவராக பிஹாரைச் சேர்ந்த நிதின் நபின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஜன.20-ல் பாஜகவின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19-ல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிதின் நபினே போட்டியின்றி பாஜகவின் புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
News January 16, 2026
₹1 கோடி லாட்டரி வென்றவர் கடத்தல்!

‘பேராசை பெரும் நஷ்டம்’ என்பதை உண்மையாக்கும் சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கண்ணூரை சேர்ந்த சாதிக் என்பவருக்கு லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழ, பேராசையில் வரி ஏய்ப்பு செய்து அதிக பணத்தை பெற திட்டமிட்டுள்ளார். இதற்காக டிக்கெட்டை விற்க முயன்றுள்ளார். இதை பயன்படுத்திய கும்பல், அதிக பணம் தருவதாக அவரை காரில் ஏற்றிச் சென்று பரிசு டிக்கெட்டை பறித்து கொண்டு நடுரோட்டில் இறக்கிவிட்டுள்ளது. SO, NO பேராசை!


