News August 3, 2024

தமிழகத்தில் பேசப்படும் 14 திராவிட மொழிகள்

image

இந்தியாவில் பேசப்படும் 17 திராவிட மொழிகளில், 14 மொழிகள் தமிழகத்தில் பேசப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் குருக்/ ஓரான் போன்ற 6 முக்கிய திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், குடகு, கோண்டி, கோண்டு, கிஷான், கோண்டா, குய், மால்டோ, பர்ஜி ஆகிய திராவிட மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.

Similar News

News January 15, 2026

தென்காசி : இரண்டு நாள் மது கடைகள் மூடல்

image

தென்காசி மாவட்டத்தில், 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல். வருகிற ஜன-16 திருவள்ளுவா் தினம், ஜன-26 குடியரசு தினம் ஆகிய இரு நாள்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்து செயல்படும் மதுக் கூடங்கள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனை உரிமம் பெற்ற கிளப்புகள், உணவகங்கள், மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும்.

News January 15, 2026

பொங்கல் ட்ரீட்: மாப்பிள்ளைக்கு 158 வகை உணவுகள்!

image

தலைபொங்கல் என்றாலே மாப்பிள்ளைகளுக்கு மாமனார் வீட்டில் ராஜ உபசரிப்புதான். ஒவ்வொரு குடும்பத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு, பல வகையான உணவுகளை விருந்து வைத்து அசத்துவர். அந்த வரிசையில் இந்த பொங்கலுக்கு இவர்கள்தான் டாப்பு. ஆந்திராவின் தெனாலி பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தனது மாப்பிள்ளைக்கு சுமார் 158 வகை உணவுகளை பரிமாறி உள்ளனர். உங்க தலைபொங்கலுக்கு மாமனார் வீட்டில் என்ன விருந்து வெச்சாங்க?

News January 15, 2026

BREAKING: பொங்கல் நாளில் பணம் அறிவித்தார் முதல்வர்

image

பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பருவமழை, டிட்வா புயலால் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும் வகையில், ₹111.96 கோடி ஒதுக்கீடு செய்து, 33%-க்கு மேல் பயிர் சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!