News August 3, 2024
கல்லூரி மாணவர் வழக்கில் சிக்கிய 4 பேர்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
Similar News
News November 6, 2025
திருச்சி: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
திருச்சி: இந்த இடத்தில் பொதுமக்கள் நடமாட தடை!

வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 8-ந்தேதி வரையும் மற்றும் மெட்ராஸ் என்ஜினீயரிங் குரூப் பயிற்சியாளர்களால் 10- 22ம் தேதி வரையிலும், காலை 7.30 – மாலை 5.30 மணி வரையும், இரவு 7 மணி – இரவு 10 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவுள்ளது. எனவே பயிற்சி தளத்தில் கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூடாது என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
திருச்சி: கோயில் கதவை உடைத்து அம்மன் தாலி திருட்டு

திருச்சி மாவட்டம் எரகுடி அடுத்துள்ள வடக்குப்பட்டி பகுதியில் பாப்பாத்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த 1சவரன் தாலி மற்றும் வெள்ளி பொருள்களை திருடி சென்றதாக கோயில் பூசாரி கணேசன் என்பவர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


