News August 3, 2024
திருப்பத்தூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை முருகர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பக்தர்கள் வசதிக்கேற்ப திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Similar News
News August 19, 2025
திருப்பத்தூர்: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

திருப்பத்தூர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க இங்கு <
News August 19, 2025
திருப்பத்தூரில் இப்படி SMS வருதா? உஷார்!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு பற்றி திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் வாட்ஸ்-அப், டெலிகிராமில் வேலை வாய்ப்பு பற்றி வரும் SMS-களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு வரும் அழைப்புகள் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News August 19, 2025
திருப்பத்தூர்: மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் முறிவு

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி கூட்டு ரோட்டில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதியதில் ஐயப்பன் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரித்து வருகின்றது.