News August 3, 2024
உலகின் உயரமான பெண் யார் தெரியுமா?

துருக்கியை சேர்ந்த ரும்ஸியா கெல்கியே உலகின் பெண் ஆவார். 2014இல் 18 வயது நிரம்பியபோது, 7.07 அடி உயரத்தில் இருந்தார். இதன்மூலம் உலகின் உயரமான பெண் என்ற சாதனையை புரிந்தார். வீவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயே, உயரமாக வளர காரணமாகக் கூறப்படும் நிலையில், அதிக தூரம் நடக்க முடியாமல் சிரமப்படும் அவர் வால்கருடன் நடந்துசெல்கிறார். அதேபோல், பிறக்கும்போதே அவர் 5.9 கிலோ எடை இருந்துள்ளார்.
Similar News
News October 31, 2025
இந்தியாவின் இரும்பு மங்கை மறைந்த தினம் இன்று

இரும்பு மங்கை, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை படைத்த இந்திரா காந்தி 1984ம் ஆண்டு இதே தினத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 முறை பிரதமர், அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர், எமர்ஜென்சியை அமல்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கினார். இந்திராவை கொண்டாட ஆயிரம் காரணங்கள் உள்ளன. என்றாலும், எமர்ஜென்சி இன்றும் அவரது அரசியல் அத்தியாயத்தின் கரும்புள்ளியாகவே உள்ளது.
News October 31, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

நவ.2-ம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு இடம் பெயரவுள்ளதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *துலாம்: தொழிலில் பிரகாசமான முன்னேற்றம். தடைபட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். *தனுசு: புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். *மகரம்: வேலையில் ஊதிய உயர்வு. வியாபாரம் செழிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
News October 31, 2025
நடிகர் அஜித் முக்கிய அறிவிப்பு.. இன்னும் 2 மாதமே!

GBU படத்திற்கு பிறகு, அஜித்தின் புதிய படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் அறிவிப்பை அஜித் வெளியிட்டுள்ளார். ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தனது அடுத்த பட அறிவிப்பு 2026 ஜனவரியில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். திரை பயணத்தில் அனைத்து சவால்களையும் கடந்து வந்திருப்பதாகவும் அஜித் உருக்கமாக பேசியுள்ளார்.


